பாலிமர் சயின்ஸ் படிப்புக்கு பாரெங்கும் வேலை

download (1)

செயற்கையாக உருவாக்கப்படும் பிளாஸ்டிக் போன்ற பலபடி சேர்மங்கள் மற்றும் இயற்கையில் காணப்படும் செல்லுலோஸ் உள்ளிட்ட பலபடி சேர்மங்கள் ஆகியவற்றின் அமைப்பு, வேதித்தன்மை, உற்பத்தி, பயன்பாடுகள் மற்றும் விளைவுகள் பற்றி விரிவாகப் படித்தறிய உதவும் பொருள் அறிவியலின் ((Material Science) ஒரு பிரிவே ‘பலபடி அறிவியல்’ எனப்படும் ‘பாலிமர் சயின்ஸ்’ (Polymer Science). இத்துறையில் உள்ள கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள், இத்துறையில் சாதித்த ஆய்வாளர்கள், வேலைவாய்ப்புகள் பற்றி விரிவாக விளக்குகிறார் ‘இன்ஸ்பையர் ஃபெல்லோ’ முனைவர் உதயகுமார்.

பிளாஸ்டிக் இல்லாத ஒரு நவீன உலகத்தை நம்மால் யோசிக்கக்கூட முடியாது. வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாறி விட்டது பிளாஸ்டிக். இத்தகைய சூழலில் ‘மனிதனால் பயன்படுத்தப்பட்ட கழிவுகளான பிளாஸ்டிக்கை எவ்வாறு மறுசுழற்சி செய்வது?’, ‘இயற்கைப் பொருட்களிலிருந்து எவ்வாறு மட்கக்கூடிய பிளாஸ்டிக்கை தயாரிப்பது?’ உள்ளிட்ட எண்ணற்ற ஆய்வுகள் உலகம் முழுவதும் நடைபெற்றுவருகின்றன. பிளாஸ்டிக்கால் விளைந்துள்ள சுற்றுச்சூழல் சீர்கேடுகளைக் களைவதற்கு சிறப்பான, நீண்டகால ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அதனால் இத்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. மாணவர்கள் தாராளமாக இத்துறையைத் தேர்வு செய்யலாம்.

பாலிமர் சயின்ஸ் பிரிவில் உள்ள படிப்புகள்/ பிரிவுகள்

* Polymer Chemistry – பலபடி வேதியியல்
* Polymer Engineering – பலபடி பொறியியல்
* Chemical Technology – வேதியியல் தொழில்நுட்பம்
* Polymer Technology – பலபடி தொழில்நுட்பம்
* Polymer Nano technology – பலபடி நானோ தொழில்நுட்பம்
* Polymer Physics – பலபடி இயற்பியல்
* Polymer Materials – பலபடி பொருளறிவியல்
* Polymer Characterization – பலபடி பண்பறிவியல்
* Cellulose Science – செல்லுலோஸ் அறிவியல்
* Plastic Technology – நெகிழி தொழில்நுட்பம்

இப்பிரிவுகளில் படிக்கலாம்

B.Sc.,  B.Tech., B.Eng.,  B.E,  B.S., M.Sc.,  M.Tech., M.Eng., M.S.  M.E., Ph.D., D.Sc.,, D.Phil., Diploma.

பாலிமர் சயின்ஸ் பிரிவைக் கொண்டுள்ள சிறந்த இந்தியக் கல்வி நிறுவனங்கள் சில…

* சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
* இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிமர் சயின்ஸ், மேற்கு வங்காளம்
* பாஸ்கராச்சார்யா காலேஜ் ஆஃப் அப்ளைடு சயின்சஸ், டெல்லி
* கிருஷ்ணதேவராயர் யுனிவர்சிட்டி, ஆந்திரப் பிரதேசம்
* யுனிவர்சிட்டி ஆஃப் டெல்லி, புதுடெல்லி
* கொச்சின் யுனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் & டெக்னாலஜி, கொச்சி
* ஹிந்துஸ்தான் யுனிவர்சிட்டி, சென்னை
* யுனிவர்சிட்டி ஆஃப் மும்பை, மும்பை
* ஜெயசாம் ராஜேந்திரா காலேஜ் ஆஃப் எஞ்சினியரிங், மைசூரு
* மைசூர் யுனிவர்சிட்டி, மைசூரு

உலக அளவில் பாலிமர் சயின்ஸ் பாடப்பிரிவைக் கொண்ட சிறந்த கல்வி நிறுவனங்கள் சில…

* தி யுனிவர்சிட்டி ஆஃப் அக்ரோன், அமெரிக்கா (www.uakron.edu)
* லெஹிஜ் யுனிவர்சிட்டி, அமெரிக்கா (www.lehigh.edu)
* யுனிவர்சிட்டி ஆஃப் கனெக்டிகட், அமெரிக்கா (www.uconn.edu)
* தி யுனிவர்சிட்டி ஆஃப் மான்செஸ்டர், இங்கிலாந்து (www.marichester.ac.uk)
* தி யுனிவர்சிட்டி ஆஃப் மிச்சிகன், அமெரிக்கா (www.umich.edu)
* லாஹ்போரோ யுனிவர்சிட்டி, இங்கிலாந்து (www.lboro.ac.uk)
* ஃப்பூடான் யுனிவர்சிட்டி ஆஃப் பாலிமர் சயின்ஸ், சீனா (www.fudan.edu.cn)
* யுனிவர்சிட்டி ஆஃப் வாட்டர்லூ, கனடா (www.waterloo.ca)
* யுனிவர்சிட்டி ஆஃப் லீட்ஸ், இங்கிலாந்து (www.leeds.ac.uk)
* ஜென்ட் யுனிவர்சிட்டி, பெல்ஜியம் (www.ugent.be)

பாலிமர் சயின்ஸ் துறையில் சாதித்த இந்திய வல்லுநர்கள் சிலர்….

* பேராசிரியர் சாண்டப்பா
* பேராசிரியர் தாமோதரன்
* பேராசிரியர் கே.தரணிக்கரசு
* பேராசிரியர் என்.ராஜேந்திரன்
* பேராசிரியர் டி.சங்கீதா
* பேராசிரியர் அஜித் பாந்தியா
* பேராசிரியர் எம்.சிவகுமார்
* பேராசிரியர் ராஜா சண்முகம்
* பேராசிரியர் ஹரிப்ரியா சேஷாத்ரி
* பேராசிரியர் சபு தாமஸ்

பாலிமர் சயின்ஸ் துறையில் சாதித்து உலகப் புகழ்பெற்ற வல்லுநர்கள் சிலர்…

* பேராசிரியர் மார்ட்டின் ஹீய்டெக்கர், ஜெர்மனி
* பேராசிரியர் சார்லஸ் குட் இயர், அமெரிக்கா
* பேராசிரியர் தாமஸ் ஹென்காக், இங்கிலாந்து
* பேராசிரியர் ஹெர்மன் மார்க், அமெரிக்கா
* பேராசிரியர் கொய்ச்சி டனக்கா, ஜப்பான்
* பேராசிரியர் ஹிடெக்கி சிரக்காவா, ஜப்பான்
* பேராசிரியர் ஜியுலியோ நட்டா, இத்தாலி
* பேராசிரியர் கார்ல் ஸீக்லர், நெதர்லாந்து
* பேராசிரியர் பால் ஜே.ப்ளோரி, அமெரிக்கா
* பேராசிரியர் ஆலன் ஜி ஹீகெர், அமெரிக்கா

பாலிமர் சயின்ஸ் துறை மாணவர்களை உற்சாகப்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களை பாடத்திட்டங்களில் கொண்டு வரவும், ஆராய்ச்சிகளை அங்கீகரிக்கவும் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள்/ குழுக்கள்

* இண்டியன் அசோசியேஷன் ஆஃப் பாலிமர் சயின்ஸ், இந்தியா
* பாலிமர் சயின்ஸ் அசோசியேஷன், அமெரிக்கா
* அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி, அமெரிக்கா
* தி சொசைட்டி ஃபார் பாலிமர் சயின்ஸ், இந்தியா
* தி சொசைட்டி ஆஃப் பாலிமர் சயின்ஸ், ஜப்பான்
* பிரிட்டிஷ் சயின்ஸ் அசோசியேஷன், இங்கிலாந்து
* தி ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி, இங்கிலாந்து
* பாலிமர் சொசைட்டி ஆஃப் தாய்லாண்ட், தாய்லாந்து
* தி டெல்ஃபோர்டு அசோசியேஷன், அமெரிக்கா
* நார்த் ஈஸ்ட் பாலிமர் அசோசியேஷன், இங்கிலாந்து

பாலிமர் சயின்ஸ் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள்/ பதக்கங்கள்/ விருதுகள்

* யங் சயின்டிஸ்ட் அவார்டு, இந்தியா
* தி பட்நாகர் அவார்டு, இந்தியா
* தி யங் ரிசர்ச்சர்ஸ் மெடல், இங்கிலாந்து
* நோபல் பரிசு, ஸ்வீடன்
* கால்வைன் மெடல், அமெரிக்கா
* தி ட்ரேய்பஸ் அவார்டு, அமெரிக்கா
* சார்லஸ் குட் இயர் மெடல், அமெரிக்கா
* மாக்ரோ க்ரூப் மெடல், இங்கிலாந்து
* ஏ.சி.எஸ் அவார்டு, அமெரிக்கா
* டேவிட் க்ரெய்க் மெடல், ஆஸ்திரேலியா

பாலிமர் சயின்ஸ் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள்…

* பிளாஸ்டிக் தொழிற்சாலைகள்
* மினிஸ்ட்ரி ஆஃப் கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைசர்ஸ், இந்திய அரசு
* மினிஸ்ட்ரி ஆஃப் சயின்ஸ் & டெக்னாலஜி, இந்திய அரசு
* உரத்தொழிற்சாலைகள்
* மருந்து தொழிற்சாலைகள்
* பாலிமர் சயின்ஸ் துறையைக் கொண்ட கல்வி நிறுவனங்கள்
* பாலிமர் சயின்ஸ் துறையைக் கொண்ட ஆய்வு அமைப்புகள்
* மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
* மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள்
* சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிளாஸ்டிக் எஞ்சினியரிங்  டெக்னாலஜி, சென்னை

Leave a Reply