கமலின் கடைசிதான் ரஜினியின் முதல். ஒரு அபூர்வ ஒற்றுமை

கமலின் கடைசிதான் ரஜினியின் முதல். ஒரு அபூர்வ ஒற்றுமை

kamalஅட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வரும் 17ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. ஆனால் சென்னையில் ரஜினியை வைத்துக்கொண்டு வெளிப்புறப் படப்பிடிப்பு எதுவும் நடத்த முடியாது என்பதால் சென்னை மயிலாப்பூர் போன்ற ஒரு செட் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் தீம் பார்க்கில் ஒன்றில் அமைக்கப்பட்டு வருகின்றதாம். மேலும் கிழக்குக்கடற்கரைச்சாலையில் உள்ள ஒரு ஸ்டுடியோவிலும் செட் போட்டுக்கொண்டிருப்பதாகச் கூறப்படுகிறது.

உலக நாயகன் கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பும் இதே பூந்தமல்லி அருகில் உள்ள தீம்பார்க்கில் தான் நடந்தது. கமல், த்ரிஷா காட்சிகள் படமாக்கிய அதே இடத்தில்தான் தற்போது ரஜினி, ராதிகா ஆப்தே சம்பந்தப்பட்ட காட்சிகள் நடைபெறவுள்ளது.

கமலின் கடைசிகட்ட படப்பிடிப்பு நடந்த இடத்தில் ரஜினியின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெறுவது தற்செயலாக அமைந்த ஒன்றாக இருந்தாலும் இரண்டையும் இணைத்து பல தகவல்கள் டுவிட்டரில் வெளியாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply