இலங்கை எதிர்க்கட்சி தலைவருக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து

இலங்கை எதிர்க்கட்சி தலைவருக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து
era sambandam
32 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் ஒரு தமிழர் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு இலங்கை தமிழர்கள் மட்டுமின்றி உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இரா.சம்பந்தனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.   .

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் பாராளுமன்ற எதிர்கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரா.சம்பந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
கடந்தமாதம் இலங்கையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இலங்கையில் பிரதான எதிர்கட்சியாக 32 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டு, அதன் தலைவராக இலங்கை தமிழரான திரு.இரா.சம்பந்தன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்திகேட்டு, மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

திரு.இரா.சம்பந்தன் அவர்கள் இலங்கையின் ஒரு சிறந்த எதிர்கட்சித்தலைவராக சிறப்பாக செயல்பட்டு, போரினால் பாதிக்கப்பட்டு தங்கள் மறுவாழ்வுக்காக ஏங்கி கொண்டிருக்கும், இலங்கை தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன். அவருக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply