உலகையே உலுக்கிய 3 வயது குழந்தையின் மரணம். ஐரோப்பிய நாடுகள் திருந்துமா?
[carousel ids=”71153,71154,71155,71156,71157,71158,71159″]
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத அந்நாட்டு மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு குடியேற கடல்வழியே பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் கடந்த கடந்த புதன்கிழமை சிரியாவில் இருந்து 23 பேர் துருக்கி சென்று அங்கிருந்து கிரீஸ் நாட்டிற்கு இரண்டு படகுகளில் சென்றனர். ஆனால் அந்த படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்ததால் படகில் பயணம் செய்த 5 வயதுய் சிறுவன் உள்பட 14 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த படகு விபத்தில் பலியானவர்களில் ஒருவன் 3 வயதே ஆன ஐலன். இந்த சிறுவனின் உடல் சமீபத்தில் ஐலன் கடற்கரை மணலில் முகம் புதைத்தபடி, வெறும் சடலமாகக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் புகைப்பட நிருபர் ஒருவர் அந்த சிறுவனின் இறந்த உடலை புகைப்படம் எடுத்து தனது பத்திரிகையில் வெளியிட்டார்.
இந்த புகைப்படம், உலகையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவம் நடந்த துருக்கியின் போட்ரம் மாவட்டம், கடல் கடந்து வரும் அகதிகளின் சந்திப்பு புள்ளியாக உள்ளது. இங்குள்ள அகியர்லார் கடற்கரையில், கடந்த புதன்கிழமை காலை 6 மணியளவில் நிலுபர் டெமிர் என்ற பெண் புகைப்பட-நிருபர் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார். இந்நிலையில் இறந்த மூவரின் உடலும், அவர்களது சொந்த ஊரான சிரியாவின் கொமானியில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் குடும்பத் தலைவரான அப்துல்லா கதறி அழுதபடி, தன் குடும்பத்தினரின் உடல்களை வலம் வந்த காட்சி, அங்கு கூடியிருந்தவர்களை விம்மி அழ வைத்தது.
எல்லையை கடந்தது குறித்து இறந்த குழந்தையின் தந்தையான அப்துல்லா குர்தி கூறுகையில், “என்னுடைய குடும்பத்தின் மரணம் அரபு நாடுகள் சிரிய அகதிகளுக்கு உதவ வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு கொள்கையை மாற்றிக்கொண்டு திருந்த வேண்டும் என்று பிற அகதிகளின் உயிர் காக்கும் அக்கறையுடன் கண்ணீர் சிந்தினார்.
இந்த குழந்தையின் இறந்த உடலை பார்த்தபின்னர் பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டின் அகதிகள் கொள்கையை மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரு குழந்தையின் மரணம் பல அகதிகளின் நல்வாழ்விற்கு ஒளிவிளக்காக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.