இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி. ஆஸ்திரேலியா அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி. ஆஸ்திரேலியா அபார வெற்றி
cricket
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஷ் தொடர் சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் போட்டி தொடர் தற்போது தொடங்கியுள்ளது. முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் மிக அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 305 ரன்கள் எடுத்தது. வாடே 71 ரன்களும், வார்னர் 59 ரன்களும், கேப்டன் ஸ்மித் 23 ரன்களும் எடுத்தனர்.

306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜே.ஜே.ராய் 67 ரன்களும், டெய்லர் 49 ரன்களும் ஸ்டோக்ஸ் 38 ரன்களும் எடுத்தனர். வாடே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply