கின்னஸ் சாதனை பெற்ற உலகின் குள்ள மனிதர் மரணம்.
[carousel ids=”71188,71189,71190,71191,71192,71193″]
உலகின் மிக குள்ளமான மனிதர் என்ற கின்னஸ் சாதனை படைத்த நேபாளத்தை சேர்ந்த சந்திரா டாங்கி என்பவர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.
கடந்த 2012ஆம் ஆண்டு உலகின் மிக குள்ளமான மனிதர் என்று கின்னஸ் சாதனையை பெற்ற சந்திரா டாங்கி கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், சிகிச்சையின் பலனின்றி நேற்று மாலை அவர் இறந்ததாகவும், அவருடைய நண்பர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வெறும் 21.5 இன்ச் உயரம் மட்டுமே இருந்தாலும் இவருடைய வேலைகளை அவரே பார்த்துக் கொள்ளும் திறன் படைத்தவர். கடந்த 1939ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி பிறந்த இவர் விவசாய வேலை பார்த்து வந்தார். இவருடைய மறைவிற்கு நேபாள நாட்டின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.