ஒரே மேடையில் இணையும் கவுண்டமணி-சிவகார்த்திகேயன்
நீண்ட இடைவெளிக்கு பின்னர் கவுண்டமணி நடித்துள்ள ’49 ஓ’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் வரும் திங்கட்கிழமை இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதுவரை எந்த ஒரு இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்ளாத கவுண்டமணி, இந்த விழாவுக்கு வருவதாக உறுதி அளித்துள்ளாராம். அதே நேரத்தில் இதே விழாவுக்கு நடிகர் சிவகார்த்திகேயனும் வர சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
நக்கலுக்கும் நய்யாண்டிக்கும் சொந்தக்காரர்களாக அந்தக்கால கவுண்டமணியும், இந்த கால சிவகார்த்திகேயனும் ஒரே மேடையில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை இப்போதே எண்ணி பார்த்து பலர் வியக்கின்றனர். இந்த விழாவே இந்த படத்திற்கு பெரும் விளம்பரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் கவுண்டமணி நடிக்கின்றார் என்ற செய்தி வெறும் வதந்தி என்றும் சமீபத்தில் கவுண்டமணியை சிவகார்த்திகேயன் மரியாதை நிமித்தமாகவே சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.