5 குழந்தைகளும் பட்டினி. வறுமையின் கொடுமை தாங்காமல் தாய் தற்கொலை

5 குழந்தைகளும் பட்டினி. வறுமையின் கொடுமை தாங்காமல் தாய் தற்கொலை
suicide
இந்தியாவில் வறுமையின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறாது. கடந்த 2014 ம் ஆண்டில் 574 விவசாயிகளும், 2015 ல் 628 விவசாயிகளும், தற்கொலை செய்துள்ளனர்

இந்நிலையில் ஒஸ்மந்தாபாத் மாவட்டத்தில் ஆம்பி கிராமத்தில் லட்சுமண் மனைவி மணீஷா கட்கல் ( 40 ). இவரது கணவனும், இவரும் விவசாயம் செய்து வருகின்றனர் . சமீப காலமாக இருவரும் விவசாய தொழில் இல்லாமல் இருந்தனர் . இதனால் 5 குழந்தைகளும் தினமும் பட்டினியால் வாடினர் . இதனை கண்டு பெரும் கவலைப்பட்டார் மணீஷா . இதனையடுத்து அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார் . இதில் அவர் உடல் கருகி பலியானார் .

இது குறித்து அந்த பகுதியில் இருந்தவர்களிடம் கூறும்போது, ‘மணீஷா எங்களிடம் பேசுகையில், தாம் பெரும் சிரமப்படுவதாக கூறினார் . அரசு வழங்கும் 18 கிலோ கோதுமை, 12 கிலோ அரிசி, 7 பேர் கொண்ட குடும்பத்திற்கு போதவில்லை, என மணீஷா எங்களிடம் சொல்வார், மிக கவலைப்படுவார் . ஆனால் இப்படி திடீரென தற்கொலை முடிவு எடுப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என்று கண்ணீருடன் கூறினர்.

Leave a Reply