பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை மீட்போம். இந்தியாவின் பதிலடியால் பாகிஸ்தான் அதிர்ச்சி
சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ராஹீல் ஷெரீப் அந்நாட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, “காஷ்மீர், பாகிஸ்தான் பிரிவினையின் தீர்க்கப்படாத ஒருபிரச்னையாகும். நீண்ட மற்றும் குறுகிய கால போரினால் மிகவும் தாங்கமுடியாத விளைவுகளை சந்தீப்பீர்கள்” என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் தளபதியின் பேச்சுக்கு இன்று பதிலடி கொடுத்த பிரதமர் அலுவலகத்தின் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், பாகிஸ்தானுடன் தற்போது இந்தியாவுக்கு உள்ள ஒரே தீர்க்கப்பட வேண்டிய பிரச்னை, பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு காஷ்மீரின் இதர பகுதிகளை மீட்பது மட்டுமே” என்றார்.
” ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது; இப்பொழுதும் இருக்கக்கூடியது. ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுடன் ஏதாவது பிரச்னை இருக்குமானால், அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிகளை எங்ஙனம் மீண்டும் இந்தியாவுடன் இணைக்க முடியும் என்பதே” என்றும் அவர் மேலும் கூறினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நோக்கி இந்தியா தனது பார்வையை திருப்பி இருப்பது பாகிஸ்தானுக்கு கடும் ஆத்திரத்தையும், அதே சமயம் இலேசான கிலியையும் ஏற்படுத்தி உள்ளது.