கர்ப்பமாக உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாமா? அப்படி செய்வதானால் என்னென்ன பலன்கள் ஏற்படும்? என்ற பல சந்தேகங்கள் பெண்களுக்கு ஏற்படும். இதற்கு விடை இதோ….
கர்ப்பமாக உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்வதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாமலிருக்க உதவும். புத்துணர்ச்சியுடன் இருக்கவும் செய்யும்.
உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், பிரசவ வலி வரும் போது அதை எதிர்கொள்ளவும் உதவும். பிரசவம் வரை மன அழுத்தம் இல்லாமலிருப்பதற்கு யோகா பயன்படும். மேலும் சுகப்பிரசவம் ஏற்பட உதவும். கர்ப்ப காலத்தில் பயிற்சியாளரின் துணையுடன் எளிமையான, வயிற்று பகுதிக்கு அழுத்தம் கொடுக்காத ஆசனங்களை செய்ய வேண்டும்.
இக்காலகட்டத்தில் எல்லாவித பயிற்சிகளும் கர்ப்பமாக உள்ளவர்களுக்கு ஏற்றதில்லை என்பதால், யோகா பயிற்சியாளர் மேற்பார்வையி்ல் செய்வது நன்மை பயக்கும்.