+2 முடிக்கும் மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்ற இடத்தில் தேங்கி நிற்கிறார்கள். அவர்கள் முன் இருக்கும் இரண்டு துறைகள் மருத்துவமும், பொறியியலும்தான். நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மருத்துவம் வாய்த்துவிட, பொறியியல் எல்லோருக்கும் சாத்தியமாகி விடுகிறது. எளிதாக கிடைக்கிறது என்பதற்காக எல்லோரும் அதில் போய் விழுகிறார்கள்.
இந்தியாவுக்கு ஓராண்டில் தேவைப்படும் ஊழியர்களில் வெறும் 15% பேர் தான் பொறியியல் பட்டதாரிகள். பொறியியலைத் தவிர்த்து பலநூறு துறைகள் இருக்கின்றன. அந்தத் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்பு களும் இருக்கின்றன. ஆனால் அதுபற்றிய விழிப்புணர்வுதான் மக்கள் மத்தியில் இல்லை. www.studyguideindia.com வெளியிட்டுள்ள ‘என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்’ (விலை ரூ.250/- Wintelligence Systems Pvt. Ltd, வெளியீடு போன்: 044-32963132.) என்ற புத்தகம் 100 துறைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. அவற்றில் உள்ள படிப்பு வாய்ப்புகள், கல்வி நிறுவனங்கள், செலவு, உதவித்தொகைகள், மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள்,சம்பள விகிதம், துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகள் என முழுமையான தகவல்களை உள்ளடக்கிய கையேடாக இருக்கிறது இந்த நூல். மாணவர்களும் பெற்றோர் களும் அவசியம் வாசித்து உணர வேண்டிய நூல்.