ZTE நிறுவனம் அதன் புதிய ஆக்சென் எலைட் ஸ்மார்ட்போனை IFA 2015 நிகழ்வில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கைப்பேசி செப்டம்பர் 24ம் தேதி முதல் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் யுனைடெட் கிங்டம் போன்ற நாடுகளில் கிடைக்கும். துருக்கி, மெக்ஸிக்கோ, சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து, ஹாங்காங், ரஷ்யாமற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பிறகு கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது. ZTE ஆக்சென் எலைட் ஸ்மார்ட்போன் EUR 419.99 (சுமார் ரூ.31,100) விலையில் கிடைக்கும்.
டூயல் சிம் ஆதரவு கொண்ட ZTE ஆக்சென் எலைட் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது. ZTE ஆக்சென் எலைட் ஸ்மார்ட்போனில் 1080×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் முழு ஹச்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. கைரேகை, குரல் மற்றும் கண் ஸ்கேனிங் சென்சார்கள் போன்ற பயோமெட்ரிக் அங்கீகார முறைகளில் ஆக்சென் எலைட் ஸ்மார்ட்போன் வருகிறது
இந்த ஸ்மார்ட்போனில் Adreno 430 ஜிபியூ மற்றும் 3ஜிபி ரேம் உடன் இணைந்து 64பிட் அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 810 (குவாட் கோர் 1.5GHz + குவாட் கோர் 2GHz) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ZTE ஆக்சென் எலைட் ஸ்மார்ட்போனில் BSI CMOS சென்சார் மற்றும் டூயல் எல்இடி ஃபிளாஸ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. பின்புற கேமராவில் 4K தீர்மானங்களை பதிவு செய்துகொள்ள முடியும்.
ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், 3ஜி, ப்ளூடூத் 4.1, ஜிஎஸ்எம், மைக்ரோ-யூஎஸ் மற்றும் 4ஜி எல்டிஇ ஆகியவை வழங்குகிறது. இதில் 3000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 172.90 கிராம் எடையுடையது. இது அயன் கோல்டு வண்ணங்களில் வருகிறது.