சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படத்தின் விநியோகிஸ்தர்கள்
இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தின் தமிழக விநியோகிஸ்தர்கள் குறித்த தகவலை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இவ்வார வெள்ளியன்று ரிலீஸாகவுள்ள சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ படத்தின் விநியோகிஸ்தர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
‘ரஜினிமுருகன்’ படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை அபிராமி ராமநாதன் அவர்களும், திருச்சி மற்றும் தஞ்சை விநியோக உரிமையை நாராயணன்சாமி அவர்களும், மதுரை மற்றும் இராமநாதபுரம் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனமும், சேலம் பகுதி விநியோக உரிமையை ஜி பிலிம்ஸ் சிவா அவர்களும் வட ஆற்காடு, தென்னாற்காடு விநியோக உரிமையை ஃபைவ் ஸ்டார் செந்தில் அவர்களும் மிகப்பெரிய தொகைகள் கொடுத்து பெற்றுள்ளனர்.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, ராஜ்கிரண், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.