ராமரின் மலரும் நினைவுகள் ஓவியமாக..!

BkwJ85aCQAAwHbl

ராவணவதம் முடிந்தபின், சீதை ராமனுடன் அயோத்தி திரும்பினாள். பட்டாபிஷேகம் நடத்த அயோத்தி மக்கள் ஆயத்தமாயினர். கோசலை, கைகேயி, சுமித்ரா ஆகியோரின் ஆசி பெற்ற ராமனுக்கு, குலகுரு வசிஷ்டர் பட்டம் சூட்டினார்.  விழா முடிந்ததும், ராமனும், சீதையும் சித்திர மண்டபத்திற்கு எழுந்தருளினர். சீதையின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் அந்த மண்டபத்தில் சித்திரமாக தீட்டப்பட்டிருந்தது. ராவணன் அவளைத் தூக்கிச் சென்றது, ராமன் அவளைத் தேடியது, அசோகவனத்தில் ராமனைக் காணாமல் அவள் ஏங்கியது போன்ற ஓவியங்களை கண்டதும், ராமனைப் பார்த்துச் சிரித்தாள் ராமனும் சிரித்தார். காளிதாசரின் ரகுவம்சத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply