இமானுவேல், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைகள்: இராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் வரும் 15 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தின குருபூஜை, இம்மாதம் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை அதாவது செப்.9 முதல் செப். 15 ஆம் தேதி வரை, 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சித் தலைவர் நந்தகுமார் உத்தரவிட்டு உள்ளார்.
இதேபோல், வரும் அக்டோபர் மாதம் பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவரின் நினைவு குருபூஜையை முன்னிட்டு, அக்டோபர் 25 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு ராமநாதபுரம் மாவட்டத்தில் அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.