பித்தப்பை கல் எளிதில் நீங்க வழிகள்

50202_o-350x250

பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் பேரிக்காய் வடிவில் சுமாராக 8 செ.மீ. நீளமும் 4 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு உறுப்பு.

நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய உதவும் பித்த நீரை சேமித்து வைக்கும் உறுப்பு பித்தப்பை அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப்பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும். நாம் உணவு உண்டதும், இந்த பித்தப்பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் இரைப்பைக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இப்படி பித்தப்பை சுருங்கி விரியமால் போனால் பித்தப் பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாறும் வாய்ப்புள்ளது.

ஒருவருடைய பித்தப்பையில் கற்கள் உண்டானால் பசிக்காதபோது சிறிது சாப்பிட்டாலே அவர்கள் வயிறு வீங்கி விடும். மேலும் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் நெஞ்செரிச்சல், புளியேப்பம் போன்ற பல பிரச்சினைகள் தோன்றும். பொதுவாக நம் தவறான வாழ்க்கை முறையினால் எந்த வயதினருக்கும் பித்தப்பையில் கற்கள் உண்டாகலாம். ஆனால் பெண்கள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள்.

அதிகபடியான மாத்திரைகளை உட்கொள்பவர்கள், கொழுப்புவகை உணவுகளை அதிகம் உண்பவர்கள், கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு மிக மிக அதிகம் . மேலும் , இரத்த சிவப்பணுக்கள் சுழற்சி மிக விரைவாக உள்ளவர்கள், இரத்தசோகை நோய் இருப்பவர்கள், செக்ஸ் ஹார்மோன் மாற்றங்கள், உணவு மண்டலத்தில் பாக்டீரியா (அ) குடல் புழுக்கள் மற்றும் டைபாயிடு போன்ற நோய் கிருமி பாதிப்புக்குள்ளானவர்கள், குடல் புண்ணால் பாதிப்பு உள்ளவர்கள், கிட்னி, கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் , புற்றுநோய் உள்ளவர்கள் போன்றோருக்கும் பித்தப் பையில் கற்கள் எளிதில் உண்டாகின்றன.

தலைவலி, வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோள்பட்டை முதல் உள்ளங்கை வரை வலி உண்டாவதல்,வயிற்றின் மேல் பாகத்தில் வலது புறம் கடுமையான வலி, உடல் எடை குறைவு, வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் மஞ்சள் நிறம் கலந்து காணப்படுதல், மஞ்சள்காமாலை, பசியின்மை, வாயுத் தொல்லை மற்றும் செரிமானத்தில் கோளாறு போன்ற பித்தப்பையில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்.

அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரண கோளறு, அல்சர் மஞ்சள் காமாலை நோய் போன்ற பல வியாதிகள் வரும்.

பித்தப்பை கல் இருப்பது உறுதியானால்..

1. அசைவ உணவை அறவே நிறுத்திவிட வேண்டும்.

2. வறுத்த மற்றும் அதிக கொழுப்பன உணவு வகைகளை உண்ணக் கூடாது.

3. பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.

4. ஃப்ரிட்ஜில் வைத்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

5. ஃபிரைடு ரைஸ் மற்றும் பரோட்டா, நூடுல்ஸ், மக்ரோனி போன்ற மைதா உணவுகளை சாப்பிடுதலை தவிர்க்கவேண்டும் ,

6. பீசா, பர்க்கர் போன்ற ஜங்க் ஃபுட் வகைகளை சாப்பிடுவதை அறவே தவிர்க்கவேண்டும்.

7. மேலும் புகை பிடித்தல், மது அருந்துதல் கூடாது.

உணவில் அதிகமான பழங்களை சேர்த்துக்கொள்ளுதல் நல்லது.

பித்தப்பை கல் நீங்க…

1. இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடி செய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.

2. எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும்.

3. ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது.

4. பத்து பங்கு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து பாதியாகக் குறுக்கி வடிகட்டி அந்த நீரை ஒரு நாளில் பல தடவை சிறுகச் சிறுக பருகுவதின் வாயிலாக பித்தப்பை கற்கள் கரைவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

5.நெருஞ்சில் விதை, சிறுவழுதுணை, வெண் வழுதுணை, பெருமல்லிகை, பாதிரி போன்ற மூலிகைகளை கஷாயமாகக் காய்ச்சி சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரகக்கற்கள், பித்தப்பை கற்கள் போன்றவை விடுபடுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

பித்தப்பை கற்களால் உண்டாகக்கூடிய வலிகளுக்கு இரு வேறு விதங்களில் மருத்துவம் அளிக்கலாம். ஒன்று வலி உள்ளபோது செய்வது, மற்றொன்று வலி இல்லாதக் காலத்தில் செய்வது

1. வலி உள்ள போது நோயாளியை வாந்தி எடுக்கச் செய்ய வேண்டும். இதற்கு உப்பு நீர் மிகவும் உபயோகமானது. வாந்தி எடுப்பதால் பித்தநீர் குழாயின் பிடிப்பு தளர்ந்துவிடும். அரிசிமாவு, ஆளி விதைமாவு, களிமண் இவற்றை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து கிண்டி வலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டலாம்,

2. கற்பூரத் தைலம் 5 சொட்டு சாப்பிடக் கொடுக்கலாம். வலி நின்ற பிறகு இனி திரும்பாமல் இருப்பதற்கும் கற்கள் உண்டாகமல் இருப்பதற்கும் நிலவேம்பு, அழுக்கிரா சூரணம் போன்றவை கொடுக்கலாம்.

3. உணவில் பழங்கள் அதிகமாக சேர்க்க வேண்டும்.

4. வலி இல்லாத காலத்தில் நிலவேம் சூரணம், வெருகடி அளவு சமமாக அழுக்கிரா சூரணம் சேர்த்து கொடுத்து வரலாம்.

5. பித்தக் கற்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில அருகில் உள்ள (சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோ, அக்குபன்ச்சர்) மருத்துவரை அணுகி மருத்துவம் செய்து  கொள்வது நல்லது.

Leave a Reply