பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி பல சமயங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது டுவிட்டரில் தெரிவித்துவிட்டு, அதன் பின்னர் டுவிட்டர் பயனாளிகளிடம் வாங்கிக்கட்டிக்கொள்ளும் வழக்கம் கொண்டவர். இந்நிலையில் சமீபத்தில் இந்தி திணிப்பு குறித்து கருத்து தெரிவித்த சுப்பிரமணியம் சுவாமி, “”இந்தித் திணிப்பு பிடிக்காதவர்களுக்கு ஒரு மாற்றுவழி உள்ளது; அதுதான் பள்ளிக்கே செல்லாமல் இருப்பது” என்று டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
இதை பார்த்த ஒருவர், ‘, “சரி! நாளை முதல் நாடெங்கும் அசைவம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை வந்தால், அசைவம் பிடிக்காதவர்களுக்கு மாற்றுவழி ஒன்றுள்ளது; அதுதான் பட்டினி கிடப்பது.” என்று அதிரடியாக பதில் கொடுத்துள்ளார். இதையடுத்து சுப்பிரமணியம் சுவாமியை கிண்டல் செய்தும், கண்டனம் தெரிவித்தும் ஏகப்பட்ட டுவீட்டுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.