ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள உப்பூர் வெயி<லுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி யது. இக்கோயிலில், ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் சதுர்த்தி விழா, நேற்று காலை 8.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவாடானை ஆதிரெத்தினம், ரவிகுமார் தலைமையிலான குருக்கள் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றினர். அதைத்தொடர்ந்து கொடிமரம், வெயிலுகந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழா நடைபெறும் 10 நாட்களிலும் சிம்மம், மயில், யானை, ரிஷபம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் தினமும் மாலை 6மணிக்கு விநாயகர் வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். செப்.,15 ல் சித்தி, புத்தி தேவியர்களுடன் விநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. செப்.,16 ல் தேரோட்டமும், 17 ல் சதுர்த்தி தீர்த்தவாரியும் நடைபெற்று விழா நிறைவடைகிறது.