தமிழகத்தில் ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு செய்ய தயார். HCL நிறுவனத்தலைவர் உறுதி
சென்னையில் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழம முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் சுமார் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்த்து வரும் நிலையில் மதுரை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் HCL நிறுவனம் வரும் 5 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் உறுதியளித்துள்ளார்.
சென்னையில் நடந்து வரும் உலக முதலீட்டாளர்கள் மாநட்டில் HCL நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் “உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு என்னை அழைத்ததை மிகப் பெரிய கவுரவமாகக் நினைக்கிறேன். தமிழகத்தில் ஏற்கெனவே ரூ.6,000 கோடி அளவில் HCL நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் மதுரை, நெல்லை மற்றும் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு எங்கள் நிறுவனம் தேவையான பங்களிப்பை வழங்கும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த மாவட்டங்களில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்( 6 ஆயிரத்து 500 கோடி ) மதிப்பிலான திட்டங்களை ஹெச்.சி.எல். ஏற்படுத்துகிறது.
HCL நிறுவனத்தில் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இதில் 35 ஆயிரம் பேர் தமிழர்கள். அறிவுசார் மாநிலமான தமிழகத்தில் இருந்து 20 ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்து வேலைவாய்ப்பு பயிற்றி அளிக்க முடிவு செய்துள்ளோம். தமிழத்தில் மென்பொருள் மேம்பாட்டு மையம் அமைக்கவும் HCL முடிவு செய்துள்ளது” என்று கூறியுள்ளார்.