சிபிஐ நீக்கிய வழக்கறிஞரை உதவிக்கு வைத்து கொண்ட சுப்ரீம் கோர்ட். 2ஜி வழக்கில் திடீர் திருப்பம்

சிபிஐ நீக்கிய வழக்கறிஞரை உதவிக்கு வைத்து கொண்ட சுப்ரீம் கோர்ட். 2ஜி வழக்கில் திடீர் திருப்பம்
Homosexual judgment review petition in the Supreme Court
இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று கூறப்படும் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞராக பணியாற்றி கொண்டிருந்த மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் திடீரென நீக்கப்பட்டதை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2ஜி வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு கே.கே. வேணுகோபால் உதவி வரும் நிலையில், அவர் சிபிஐ வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன், 2ஜி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கே.கே.வேணுகோபால், தாம் இந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டதாக தனக்கு வருவாய்த் துறை சார்பில் கடிதம் வந்துள்ளதாகவும், எனவே இனி இவ்வழக்கில் தன்னால் ஆஜராக முடியாது என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “எங்களுக்கு உங்கள் உதவி தேவை. மத்திய அரசிடம் நாங்கள் கூறுகிறோம். இதை எப்படி சொல்வது என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் சிபிஐ வழக்கறிஞராக இல்லாவிட்டால், நீதிமன்றத்துக்கு வழக்கில் உதவுபவராக உங்கள் பணியை தொடரலாம்” என்றனர்.

Leave a Reply