உயரம் குறைவான பாலத்தின் அடியில் சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து. அதிர்ச்சி புகைப்படங்கள்
[carousel ids=”71477,71478,71479,71480,71481,71482,71483,71484,71485,71486,71487,71488″]
இங்கிலாந்து நாட்டில் உள்ள கிரேட்டர் மான்சென்ஸ்டர் என்ற பகுதியில் டபுள் டக்கர் பேருந்து ஒன்று உயரம் குறைவான பாலத்தின் அடியில் அமைந்த சாலையில் சென்றபோது, பேருந்தின் மேல்பகுதி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த உயரத்தில் உள்ள பேருந்துகள் அந்த வழியில் செல்ல தடை செய்யப்பட்டிருந்தும் கவனக்குறைவு காரணமாக பேருந்தை ஓட்டி சென்ற பெண் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் கடந்த ஒருவாரத்திற்கு முன்புதான் பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் பேருந்தின் மேல்பகுதி தனியாக பெயர்ந்து கீழே விழுந்தது. மேல்பகுதியில் பயணம் செய்த பயணிகளில் 17 பேர்களின் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தாவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தை அடுத்து பேருந்து ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஓட்டுனர் ஏற்கனவே இந்த பகுதியில் பேருந்தை ஓட்டியதில்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.