செம்பை வைத்தியநாத பாகவதரின், 119வது பிறந்த நாளையொட்டி, இரு நாள் சங்கீத உற்சவம் செப்.,12ல் துவங்குகிறது.பாலக்காடு, செம்பை பார்த்தசாரதி கோவில் கலையரங்கில், அன்று காலை, 11:30 மணிக்கு நடக்கும் விழாவில், எம்.பி., ராஜேஷ், உற்சவத்தை துவக்கி வைக்கிறார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் கண்டமுத்தன் தலைமை வகிக்கிறார். மலபார் சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் பத்மகுமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். காஞ்சக்காடு ராமச்சந்திரன் குழுவினர் கச்சேரி நடக்கிறது. மறுநாள் காலை 11.30 மணிக்கு செம்பை வித்யா பீடத்தின், 30ம் ஆண்டு விழாவை, எம்.பி., பிஜூ துவக்கி வைக்கிறார். நீதிபதி கிருஷ்ணன், கலெக்டர் மேரிக்குட்டி பங்கேற்கின்றனர். மண்ணுார் ராஜகுமாரனுண்ணி குழுவினரின் கச்சேரி நடக்கிறது.இரு நாள் விழாவில், 180 பேரின் கச்சேரிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை, தலைவர் செம்பை ஸ்ரீனிவாசன், துணைத்தலைவர் செம்பை சுரேஷ், செயலாளர் கீழத்துார் முருகன், நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.