சமீபத்தில் வாட்ஸ்ஆப்-பில் கண்டறியப்பட்ட பிழையை அந்த நிறுவனம் சரிசெய்துள்ளது. இதனால் 2 கோடி வாட்ஸ்ஆப் பயனாளர்கள் பாதிப்படைவது தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாடில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியை கிட்டத்தட்ட 9 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில் 2 கோடி பேர் வாட்ஸ்ஆப்பை கம்ப்யூட்டரில் பிரவுசர் மூலமாகவும் பயன்படுத்துகின்றனர்.
அப்படி பிரவுசரில் பயன்படுத்துபவர்களின் எண்களுக்கு ஹேக்கர்கள், பிஸினஸ் கார்ட் எனப்படுகிற தொடர்பு விவரங்கள் அடங்கிய, குறியீடுகள் அடங்கிய விகார்டை அனுப்புகின்றனர். அதை பயனர்கள் தெரியாமல் க்ளிக் செய்து தங்கள் கணிணியில் பதிவிறக்கம் செய்துவிட்டால், அவர்களது கணிணி ஹேக்கர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.
இந்த பிழையை செக் பாயின்ட் எனும் நிறுவனம் கண்டறிந்து வாட்ஸ்ஆப் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள புதிய வாட்ஸ்ஆப் அப்டேட் மூலம் இந்த பிழை சரிசெய்யப்பட்டுள்ளது.