ஓலா கேப்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலைக்கு சேர்ந்த நரேன் கார்த்திகேயன்

ஓலா கேப்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலைக்கு சேர்ந்த நரேன் கார்த்திகேயன்
naren 1 naren
கால் டாக்சி நிறுவனங்களில் ஒன்றான ஓலா கேப்ஸ்’ என்ற நிறுவனத்திற்காக ஒரே ஒருநாள் மட்டும் டிரைவராக பணிபுரிய தமிழகத்தை சேர்ந்த பிரபல ஃபார்முலா ஒன் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் சம்மதித்துள்ளார்.

ஓலா கேப்ஸ் நிறுவனம் புதிய கார்கள் வாங்கியுள்ளதை கொண்டாடும் வகையில் ‘ஓலா பிரைம் டைம் ‘என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்து இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் போது தமிழகத்தை சேர்ந்த பார்முலா ஒன் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் அவர்களை ஒரு நாள் மட்டும் கார் டிரைவராக பணிபுரிய  ஓலா நிறுவனம் கேட்டுக் கொண்டது.

ஓலா நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நரேன் கார்த்திகேயன் நேற்று ஒருநாள் மட்டும் பெங்களூரு நகரில் ஓலா கார் டிரைவராக பணியாற்றினார்.

தாங்கள் புக் செய்த காரில் டிரைவராக இருந்த நரேன் கார்த்திகேயனை பார்த்த பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. பயணிகளுடன் பேசிக்கொண்டே டிரைவிங் செய்த நரேன் அவர்களுடன் செல்பியும் எடுத்து கொண்டார்..

Leave a Reply