46 வயது பெண்ணிற்கு முதுகில் தோன்றிய மூன்றாவது மார்பகம்?
அமெரிக்காவை சேர்ந்த 46 வயது பெண் ஒருவருக்கு முதுகில் மார்பகம் அளவிற்கு புற்றுநோய் கட்டி ஒன்று வளர்ந்து வருவதாகவும், விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை மருத்துவர்கள் அகற்றவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள டப்ளின் என்ற நகரை சேர்ந்த பெயர் கூறவிரும்பாத 46 வயது பெண் ஒருவருக்கு முதுகுப்பகுதியில் ஒரு பெரிய கட்டி வளர்ந்துள்ளது. மார்பகம் போன்று காணப்படும் இந்த கட்டியை எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், இந்த புற்றுநோய்க் கட்டியை அகற்ற விரைவில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர்.
கடந்த 10 வருடங்களாக இந்த கட்டி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதாகவும், ஆனால் கடைசி மூன்று வருடங்களாக மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருவதோடு, கடும் வலியையும் கொடுத்ததாக அந்த பெண் கூறியுள்ளார். இந்த கட்டி தற்போது 19 செமீ நீளமும், 6.7 செமீ அகலமும் இருப்பதாகவும், இந்த கட்டியை அகற்றும்போது வேறு ஏதேனும் பாதிப்பு வருமா? என்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.