ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணி

hp

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 75 அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆர் அண்ட் டி புரபெஷனல்ஸ் பிரிவின் கீழ் அனலைட்டிகல் முதன்மை மேலாளர், துணை மேலாளர் பணியிடங்களுக்கு 45 பேரும், அசிஸ்டன்ட் அக்கவுண்ட்ஸ் அதிகாரி பிரிவில் துணை மேலாளர் மெடிக்கல் சர்வீஸ், பேகேஜிங் அண்ட் குவாலிட்டி கண்ட்ரோல் அதிகாரி, இன்பர்மேசன் சிஸ்டம் அதிகாரி பணியிடங்களுக்கு 30 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதி: பெட்ரோகெமிக்கல், கெமிஸ்ட்ரி, அனலைடிகல், பாலிமர் டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, மாலிகுலர் பயாலஜி, பயோடெக் உள்ளிட்ட படிப்புகளில் பிஎச்.டி மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2015

மேலும் வயதுவரம்பு, சம்பளம், தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply