வண்டலூர் பேருந்து நிலையத்திற்கு நிலம் தர உரிமையாளர்கள் மறுப்பு.

வண்டலூர் பேருந்து நிலையத்திற்கு நிலம் தர உரிமையாளர்கள் மறுப்பு.
VANDALUR
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்துகள் மற்றும் வெளியூர் பேருந்துகளும் இயங்கி வருவதால் பயணிகளின் அதிக வருகை காரணமாக இடநெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே புறநகர் பேருந்து நிலையம் ஒன்றை வண்டலூரில் அமைக்க அரசு திட்டமிட்டு இருந்தது.

இதற்கான நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் இருக்கும் நிலையில் அப்பகுதி நில உரிமையாளர்கள் நிலம் தர மறுப்பு தெரிவித்து விட்டனர். நிலம் கையகப்படுத்தப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம்  பாதிக்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளதால் பேருந்து நிலையம் இங்கு அமைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை புறநகர் பேருந்து நிலையம் வண்டலூரில் அமைக்க அரசு முடிவு செய்து இதற்காக 119 நில உரிமையாளர்களிடம் நிலம் கேட்கும் நில உரிமையாளர்களுடனான கூட்டம் வண்டலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 119 நில உரிமையாளர்களும் நிலம் தர மறுப்பு தெரிவித்து விட்டனர். நிலம் கையகப்படுத்தப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம்  பாதிக்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் இந்த கூட்டம் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் முடிந்தது.

நிலம் கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? அல்லது வேறு இடத்திற்கு பேருந்து நிலைய திட்டம் மாற்றப்படுமா? என்பது குறித்து இன்னும் சில நாட்களில் தெரியும் என அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply