திருமண பந்தம் முறிந்தது. தொலைக்காட்சி வர்ணனையாளர் ரம்யா அறிவிப்பு

திருமண பந்தம் முறிந்தது. தொலைக்காட்சி வர்ணனையாளர் ரம்யா அறிவிப்பு
ramya
பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளர் ரம்யா கடந்த ஆண்டு பிப்ரவரி அப்ரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருந்த ரம்யா, சமீபத்தில் வெளியான மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ படத்தில் துல்கார் சல்மானின் தோழியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் ரம்யாவுக்கும் அவருடைய கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இருவரும் பிரியவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில், இந்த செய்தி தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் “ஆம். எனது திருமண பந்தம் முறிந்தது. இது இருவரும் இணைந்தே எடுத்த முடிவு. இந்த அறிவிப்பின் மூலம் வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்.

எனது ஊடக நண்பர்கள், நலன் விரும்பிகள் என அனைவரிடமும் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறேன். திருமண பந்த முறிவு எனது தனிப்பட்ட பிரச்சினை. மேலும், அது மிகவும் உணர்வுப்பூர்வமானது. எனவே, எனது தனிப்பட்ட சுதந்திரத்துள் யாரும் அத்துமீறி பிரவேசிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்சினையை இத்தோடு விட்டுவிடுங்கள். இப்போது எனது கவனம் எல்லாம் வேலையின் மீதே இருக்கிறது. என் பணி நிமித்தமாக உதவும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply