அன்னா ஹசாரா உண்ணாவிரத போராட்டம் திடீர் ரத்து ஏன்?
கருப்புப் பணப் பதுக்கல், மத்திய அரசின் நில ஆர்ஜித சட்டம் ஆகியவற்றை எதிர்த்தும், வலிமையான லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தியவாதி அன்னா ஹசாரே, டில்லியில் நடத்த திட்டமிட்டுருந்த உண்ணாவிரதப் போராட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று அன்னா ஹசாரா சார்பில் வெளியான ஒரு அறிக்கையில், “ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஒரே தகுதி – ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து விட்டது. மேலும் நில ஆர்ஜித சட்டத்தை கைவிடுவதாகவும் அறிவித்துள்ளது. எனவே காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடத்த திட்டமிட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.