அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா – மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஜோடி, ஆஸ்திரேலியாவின் கேசி டெல்லாக்குவா மற்றும் கஜகஸ்தானின் ரோஸ்லாவா ஷிவ்டோவா ஜோடியை 6-3. 6-3 என்ற நேர் செட்களில் தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. \
இந்த இறுதி போட்டி தொடக்கம் முதலே மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. சானியா – ஹிங்கிஸ் ஜோடியின் அபாரமாக ஆட்டத்திற்கு கேசி டெல்லாக்குவா – ரோஸ்லாவா ஷிவ்டோவா ஜோடியினர் ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். இறுதியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி 6-3. 6-3என்ற நேர் செட் கணக்கில் வெற்றிக்கனியை பறித்து கோப்பையை தட்டிச்சென்றது. விறுவிறுப்பான இந்த போட்டி வெறும் 69 நிமிடங்கள் ம்ட்டுமே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற சானியா-ஹிங்கிஸ் ஜோடிக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது.
தொடர்ந்து அசத்தி வரும் 28 வயதான சானியா மிர்சாவுக்கு 5வது இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஏற்கனவே ஹிங்கிசுடன் இணைந்து விம்பிள்டனை வென்று வரலாறு படைத்த சானியா தற்போது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.
34 வயதான ஹிங்கிஸ் ஏற்கனவே கலப்பு இரட்டையரில் லியாண்டர் பெயசுடன் இணைந்து இங்கு பட்டம் வென்றிருந்தார். மொத்தத்தில் இது அவரது 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.