உணவை இயற்கையான முறையில் செரிமானமடைய வைக்கும் பப்பாயின் என்சைம், பப்பாளிப் பழத்தில் உள்ளது. அதனால் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்ய இப்பழம் உதவும்.
l பப்பாளியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ் காரணமாக உடலில் மூப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கிறது. இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கிறது.
l உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் இது. இதில் குறைந்த அளவு கலோரியும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் உள்ளதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது.
l நார்ச்சத்து மிக்கது, உடலில் கொழுப்பின் அளவை குறைக்கும். கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அடைவதைத் தடுக்கும் என்சைம்களைக் கொண்டிருப்பதால், மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
l வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற சத்துகள் நிறைந்துள்ளதால், உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். காய்ச்சல், சளி, நாள்பட்ட காய்ச்சலுக்கு இது சிறந்த நிவாரணி.
l டெங்கு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குப் பப்பாளி இலைச் சாறைப் பருகக் கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், டெங்கு நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ரத்த அணுக்கள் பெருகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
l பப்பாளிப் பழத்தில் இருக்கும் அழற்சியைத் தடுக்கும் என்சைம்கள் மூட்டு வலியைக் குறைப்பதற்கு உதவுகின்றன. இதிலிருக்கும் மேலும் சில என்சைம்கள் புற்றுநோய் வருவதைத் தடுப்பதிலும் உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
l கல்லீரலில் உருவாகும் புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைப் பப்பாளி பழம் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
l பெருங்குடலில் உள்ள சளி, சீழைப் பப்பாளி ஜூஸ் குணப்படுத்தும்.
l பப்பாளி பழத்தின் விதைகளிலும் மருத்துவக் குணங்கள் நிறைய உள்ளன. குடல் புழுக்களை அகற்றுவதில் பப்பாளி விதைகள் பெரும் பங்காற்றுகின்றன.
l பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீரான இடைவெளிகளில் வருவதற்குப் பப்பாளி பழம் உதவுகிறது.
l சிலர் காலையில் எழுந்ததுமே மிகவும் சோர்வாக உணர்வார்கள். பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது போன்ற சோர்வு இருக்கும். இவர்கள் தினமும் சில துண்டு பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.
l பப்பாளிப் பழத்தில் இருக்கும் நச்சுத் தன்மையை நீக்கும் என்சைம்கள், சிறுநீரகத்தில் படிந்திருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதில் பெரும் பங்காற்றுகின்றன.
l பேன், பொடுகைப் போக்கும் திறன் பப்பாளிக்கு உண்டு. அதனால் தான் பெரும்பாலான ஷாம்புகளில் பப்பாளி பயன்படுத்தப்படுகிறது.
l சருமத்தின் வறட்சித்தன்மையைப் போக்கும் திறன் கொண்டது பப்பாளி பழம். தோலின் மயிர்க்கால்களில் படிந்திருக்கும் கண்ணுக்குப் புலப்படாத அழுக்குகளைப் பப்பாளியில் உள்ள என்சைம்கள் அகற்றிச் சுத்தப்படுத்தும்.
l பப்பாளிப் பழத்தின் தோல், சதைப் பகுதிகளை மசித்து முகத்தில் பூச்சாகப் பயன்படுத்தினால் கரும்புள்ளிகள், கருவளையங்கள் போன்றவை மறைந்து, முகம் பளிச்சிடும். நாள்பட்ட காயங்கள், தொற்றுகளைக் கொண்டவர்கள் பப்பாளிப் பழத்தை மசித்துப் பூசிவந்தால் சருமம் புத்துணர்வையும் பளபளப்பையும் பெறும்.