புபனேஸ்வரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி)யில் முதன் முறையாக ஒடிசி படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
பி.டெக்.,படிப்பில் முதலாமாண்டில் ஒரு பிரிவாக இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பில் ஏற்கெனவே 10 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
ஐஐடி நிறுவனம் மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு ஒடிசி நடனத்தில் புகழ்பெற்ற கும்கும் மொகந்தி மற்றும் ரதிகந்த் மொஹபத்ரா ஆகியோரை நியமித்துள்ளது. இந்தப் படிப்பை தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவர்கள் டிப்ளமோ வரை செல்ல முடியும் என்று ஐஐடி புபனேஸ்வரின் இயக்குனர் பேராசிரியர் ஆர்.வி ராஜகுமார் தெரிவித்துள்ளார்.