நூற்றாண்டை கடந்த பாலவிநாயகர் கோயில்!

LRG_20150912113803997570

ஆண்டிபட்டி மேற்கு ஓடையின் கரையில் அமைந்துள்ளது பாலவிநாயகர் கோயில். நூற்றாண்டை கடந்து இன்றும் கோயில் மக்கள்  மத்தியில் பிரசித்திபெற்ற வழிபாட்டு தலமாக இந்த கோயில் உள்ளது. திருமண தடைகள் நீங்கவும், மாணவர்களின் கல்வி வளம் பெருகவும் இக்÷ காயிலின் பிரகாரத்தை 48 நாட்கள் தொடர்ந்து சுற்றி வந்து பிரார்த்திக்கின்றனர். பாண்டிய மன்னர் காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  பெய்த மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட காளியம்மன் சிலை குள்ளப்புரம் நதிக்கரையில் ஒதுங்கி உள்ளது.  பக்தர் ஒருவரின் கனவில் வந்த அம்மன், குள்ளப்புரம் நதிக்கரையில் தங்கி இருப்பதாகவும், ஆண்டிபட்டி பகுதி மக்களுக்கு அருள்பாலிக்க வந்திரு ப்பதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி பகுதி மக்கள் ஒன்று கூடி குள்ளப்புரம் நதிக்கரையில் ஒதுங்கியிருந்த காளியம்மன் சி லையை மேளதாளத்துடன் ஆண்டிபட்டி கொண்டு வந்து வைத்து வணங்கி வந்தனர்.

பக்தரின் கனவில் வந்த அம்மன் இப்பகுதியில் பால விநாயகரை பிரதிஷ்டை செய்ய வலியுறுத்தியதால் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்மன் உத்தரவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலவிநாயகரை வணங்கிய பின்னரே, அம்மனை வழிபடத்துவங்கினர். சிறு கோயிலில்  குடிகொண்டிருந்த பால விநாயகருக்கு 2009 ல் இப்பகுதி மக்கள் பெரிய கோயில் கட்டி குடமுழுக்கு நடத்தினர். கோயில் பூஜாரி பி.ராமையா கூறிய தாவது: சங்கடஹர சதுர்த்தி, பவுர்ணமி பூஜை, கார்த்திகை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பள்ளி, கல்லுõரியில் படிக்கும் மாணவ மாணவிகள்  தேர்வில் சாதனை படைக்க அருள் வேண்டி, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத இறுதியில் கோயிலில் ஹயக்கீரீவர் பூஜை நடத்தப்படுகிறது, என்றார். மேலும் அறிய…80151 51523.

Leave a Reply