நேரடி டிவி நிகழ்ச்சியில் அடிதடியில் ஈடுபட்ட பெண் சாமியார். பெரும் பரபரப்பு
[carousel ids=”71715,71716,71717″]
சமீபகாலமாக பெண் சாமியார் ராதே மா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. வரதட்சணை வழக்கு, விபச்சாரம் செய்ய தூண்டியதாக குற்றச்சாட்டு மற்றும் மாடர்ன் உடையில் வலம் வந்தது ஆகியவை ராதே மா சந்தித்த சர்ச்சைகள்
இந்நிலையில் இந்த சர்ச்சைகள் குறித்து நேரடி விவாத நிகழ்ச்சி ஒன்றை வட இந்திய ஊடகம் ஒன்று நடத்தியது. இந்த விவாதத்தில் இந்து மகாசபையை சேர்ந்த சுவாமி ஓம் ஜி மகாராஜி மற்றும் இந்து மதத்தை சேர்ந்த பெண் தலைவர் தீபா ஷர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியில் திடீரென இந்து மதத் தலைவர் தீபா ஷர்மா எழுந்து வந்து, சுவாமி ஓம் ஜி மகாராஜை சரமாரியாக தாக்கினார். பதிலுக்கு மகாராஜியும் தீபா ஷர்மாவை தாக்கினார். நேரடி ஒளிபரப்பில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டது நிகழ்ச்சியை நடத்திய தொலைக்காட்சி நிறுவனமும், இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த நேயர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏற்கனவே பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் இரண்டு சாமியார்கள் ஒருவரை ஒருவர் இதேபோல அடித்து கொண்ட நிகழ்வு ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?t=46&v=BYHZcdC_LM8