அரசு விளம்பரங்களில் முதல்வர்களின் படம். தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்.

அரசு விளம்பரங்களில் முதல்வர்களின் படம். தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்.
cm
மாநில அரசு விளம்பரங்களில் முதல்வரின் படம் வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் ஒப்புக் கொண்டுள்ளது.

அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம்பெறுவது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற பொதுநல வழக்கு ‘‘மத்திய, மாநில அரசுகளின் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும் மாநில முதல்வர் உள்பட அரசியல் தலைவர்களின் படங்கள் இடம்பெறக் கூடாது’’ என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்புக்கு மாநிலங்களில் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் ‘‘கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும் அரசியலமைப்புச் சட்டம் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள உரிமைகளுக்கு மாறாகவும் உள்ள இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’’ என்று தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகத்தை போல மற்ற மாநிலங்களின் சார்பிலும் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களை விசாரணை எடுத்துக் கொள்ள சுப்ரீம் கோர்ட் நேற்று ஒப்புக் கொண்டது. அரசு விளம்பரங்களில் முதல்வர் படம் வெளியிட சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. இப்போது அதே அமர்வு தனது தீர்ப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய ஒப்புக் கொண்டது. மேலும் இதுகுறித்து பதில் அளிக்கும்படி மத்திய அரசு மற்று எல்லா மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப நேற்று உத்தரவிட்டது.

‘‘அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் படம் இடம்பெறுவது தொடர்பான வழக்கு நடந்த போது, எந்த மாநில அரசும் விசாரணையில் பங்கெடுக்கவில்லை. இப்போது, தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி மாநில அரசுகள் நீதிமன்றத்தை அணுகுகின்றன. இந்த வழக்கில் பிஹார் அரசைத் தவிர வேறு எந்த மாநில அரசும் விசாரணையில் பங்கேற்கவில்லை’’ என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply