சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் பாதுகாப்பாக வைப்பு!

nagarkoil-cuddalore-vinayagar-silaigal-mumuram-big

பொள்ளாச்சி பகுதியில், விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட உள்ள சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்துக்கள் பண்டிகையில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். இவ்விழாவையொட்டி, இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்துவதும்; பின், ஆற்றில் கொண்டு சிலைகளை கரைப்பதும் வழக்கம். விநாயகப்பெருமானுக்கு பிடித்த கொழுக்கட்டை, அருகம்புல் போன்றவை படைத்து வழிபாடு செய்யப்படும். இந்தாண்டும் முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்காக பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். பொள்ளாச்சி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில், இந்து முன்னணி, விஷ்வ இந்து பரிஷத், உலக நலவேள்விக்குழு, பொதுமக்கள் சார்பில் என மொத்தம் 280க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்படுகின்றன.

விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, விசர்ஜனம் செய்யும் வரை அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில், பொள்ளாச்சி பகுதியில் பிரதிஷ்டை செய்வதற்காக, சிலைகள் பாதுகாப்பாக ஊஞ்சவேலாம்பட்டியில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 75 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. கண்காணிப்பு கேமரா மூலம் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில், 75 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இவை பிரதிஷ்டை செய்யும் இடங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகிறது. அதிகப்பட்சம் 11 அடி உயரத்தில் சிலை வைக்கப்பட உள்ளது, என தெற்கு மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் இணைச் செயலாளர் கருணாகரன் தெரிவித்தார்

Leave a Reply