விஜய்யின் சஞ்சயை பின்பற்றும் விஜய்சேதுபதியின் சூர்யா
விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘நான் அடிச்சா தாங்கமாட்ட’ என்ற பாடலில் விஜய்யின் மகன் சஞ்சய் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதேபோல், விரைவில் வெளிவரவுள்ள ‘நானும் ரெளடிதான்’ படத்தில் விஜய்சேதுபதியின் பத்து வயது மகன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
‘நானும் ரெளடிதான்’ படத்தில் விஜய்சேதுபதியின் சிறுவயது கேரக்டர் ஒன்று வருகிறது. இந்த கேரக்டருக்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் பல சிறுவர்களை ஆடிஷன் நடத்தியும் திருப்தி ஏற்படவில்லை. இந்நிலையில் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த விஜய்சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி, இயக்குனர்களில் படவே, அவர்தான் இந்த கேரக்டருக்கு பொருத்தமானவர் என அவர் முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதியின் சிறுவயது கேரக்டரில் அவரது மகன் சூர்யா சேதுபதி நடித்துள்ளார்.
இந்த தகவலை விஜய்சேதுபதி உறுதி செய்துள்ளார். ஆனால் சூர்யாவின் கேரக்டர் குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது என்றும் படம் பார்த்து அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். விஜய்சேதுபதியின் வாரிசின் நடிப்பினை பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.