ஜெயலலிதா அரசின் தீர்மானத்திற்கு திமுக வரவேற்பு
தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் ஒன்றுக்கு பிரதான எதிர்க்கட்சியான திமுக வரவேற்றுள்ளது.
இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்றும், ஐநா மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த தீர்மானத்தை திமுக, மதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், பாமக, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.
தமிழக அரசை போல மத்திய அரசும் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதேபோல் தமிழக சட்டப்பேரவை தீர்மானத்திற்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தீர்மானம் ஈழத் தமிழர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுக்கிறது என்றும், இந்த தீர்மானம் அமெரிக்காவின் முடிவுக்கு பெரும் அழுத்தத்தை கொடுக்கும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்