இறைச்சிக்கு தடை கோருவதே சச்சரவுகளுக்கு வழி வகுக்கும். சுப்ரீம் கோர்ட் அதிரடி

இறைச்சிக்கு தடை கோருவதே சச்சரவுகளுக்கு வழி வகுக்கும். சுப்ரீம் கோர்ட் அதிரடி
meat
ஜெயின் மக்களின் ‘பர்யுர்ஷான் ‘ என்ற பண்டிகைக்காக இறைச்சி விற்பனைக்கு சமீபத்தில்  மகாராஷ்டிர மாநில அரசு தடை விதித்தது. இதற்கு  எதிராக மும்பை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணை நேற்று நடந்தது., இந்த வழக்கை விசாரித்த  மும்பை உயர்நீதிமன்றம் இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்தும் மும்பை உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஜெயின் அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டை அணுகி மனு ஒன்றை தாக்கல் செய்தது.

சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.தாக்குர், குரியன் ஜோசப்  அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ஜெயின் அமைப்பின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் தீர்ப்பின் போது ” இறைச்சி உண்பவர்கள் வீட்டுக்குள் ஏன் நீங்கள் நுழைகின்றீர்கள்? அவர்கள் விருப்பப்படி அவர்கள் வாழட்டும் …என்ற இந்து, இஸ்லாம் மதங்களில் நிலவும் துவேஷங்களை தொடர்ந்து எதிர்த்து வந்த கவிஞர் கபீரின் வார்த்தைகளை முன் வைத்து தீர்ப்பளித்தனர்.

இறைச்சிக்கு தடை விதித்தால் அகிம்சையை கற்று கொடுத்து விட முடியுமா? இது திணிக்கப்பட வேண்டிய காரியம் அல்ல.  வளர்த்தெடுக்கப்பட வேண்டிய விஷயம். இறைச்சிக்கு தடை கோருவதே சச்சரவுகளுக்கு வழி வகுக்கும். தடையை அமல்படுத்துவதிலும் சங்கடங்கள் இருக்கின்றன.பிற சமுதாயத்தினரை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.

ஆடு, மாடு, கோழி வெட்டுவது நமது நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் பிரசித்தி பெற்ற ஒரு தொழிலாக வளர்ந்து விட்டது. தயவு செய்து சகிப்புத்தன்மையுடன் வாழப் பழகுங்கள். கருணை என்பது எப்போதும் மனிதனுடன் இருக்க வேண்டியது. பண்டிகை காலத்தில் மட்டும் இருந்தால் போதுமானதா?” என்று கேள்வி எழுப்பினர்.

Leave a Reply