ஐபோன் 6 இலவசமாக வேண்டுமா? விந்துதான செய்யுங்கள். சீனாவில் புதுமையான விளம்பரம்
ஐபோன் 6ஐ வாங்குவதற்காக பலர் தங்கள் சிறுநீரகங்களை விற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் சீனாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று விந்துதானம் செய்தால் ஐபோன் 6ஐ இலவசமாக தருவதாக அறிவித்துள்ளது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் விந்துதானம் செய்து ஒவ்வொரு முறையும் ஐபோன் 6ஐ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்
ஆனால் விந்துதானம் செய்பவர்களுக்கு என ஒருசில தகுதிகளை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. விந்துதானம் அளிப்பவர் குறைந்தபட்சம் 165 சென்டிமீட்டர் (சுமார் ஐந்தரை அடி) உயரம் இருக்க வேண்டும். குறைந்தபட்சமாக ஒரு கல்லூரியில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் ஆகியவை முக்கிய நிபந்தனைகள். மற்ற நிபந்தனைகள் விந்துதானம் செய்ய வரும்போது தெரிவிக்கப்படும் என சீனாவின் பிரபல மருத்துவமனைகளில் ஒன்றான ஷங்காய் ருஜின் ஆஸ்பத்திரி நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளது.
விந்துதானம் செய்தவர்கள் ஐபோன் 6 தேவையில்லை என்றால் அதற்கு சமமான ரொக்கத்தொகையை பெற்றுக் கொள்ளலாம். இந்த அறிவிப்பை அடுத்து விந்துதானம் செய்பவர்கள் அந்த மருத்துவமனையை நோக்கி படையெடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.