7வது மாடியில் இருந்து 300 குழந்தைகளை தூக்கி எறிந்த ஆசிரியர்கள். சீனாவில் பரபரப்பு

7வது மாடியில் இருந்து 300 குழந்தைகளை தூக்கி எறிந்த ஆசிரியர்கள். சீனாவில் பரபரப்பு
china
சீனாவில் உள்ள மழலையர் பள்ளியில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருந்து சுமார் 300 குழந்தைகளை அந்த பகுதியில் இருந்த பொதுமக்களும் ஆசிரியர்களும் தங்கள் சமயோசித புத்தியினால் காயமின்றி காப்பாற்றினர்.

சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள நின்ங்டே நகரில் உள்ள மழலையர் பள்ளி ஒன்று ஏழு மாடி கட்டிடம் ஒன்றில் இயங்கி வந்தது. இந்த கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்தது. தீ மிக வேகமாக பரவியதால், அந்த பள்ளியில் இருந்த சுமார் 300 குழந்தைகளை காப்பாற்ற அதிரடியாக களத்தில் இறங்கிய அந்த பகுதி மக்கள் ஒரு பெரிய கம்பளியை கீழே பிடித்து கொண்டனர். மேலும் குழந்தைகளுடன் இருந்த ஆசிரியர்கள் ஒவ்வொரு குழந்தையாக ஏழாவது மாடியில் இருந்து கம்பளியை நோக்கி மிக வேகமாக தூக்கியெறிந்தனர். சுமார் அரை மணி நேரத்தில் அந்த பள்ளியில் இருந்த 300 குழந்தைகளும் எவ்வித சிறுகாயமும் இன்றி காப்பாற்றப்பட்டனர். இருப்பினும் குழந்தைகள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த பகுதி பொதுமக்களும் ஆசிரியர்களும் சமயோஜிதமாக யோசித்ததால், எதிர்கால இளைய சமுதாயத்தியரான மழலைகள் பாதுகாப்பாக தப்பி, உயிர் பிழைத்துள்ளனர்.

Leave a Reply