சாப்பிடும்போது செல்பி எடுக்க வேண்டுமா? இதோ வந்துவிட்டது செல்பிஸ்பூன்
ஸ்மார்ட்போன் வந்ததில் இருந்து அதில் உள்ள பலவகையான வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, அனைவரும் பயன்படுத்தும் ஒரு விஷயம் செல்பி புகைப்படம் எடுப்பது. சிறுவர்கள், இளைஞர்கள்,நடுத்தர வயதினர் மற்றும் முதியோர் வரை அனைவரும் தற்போது செல்பியில் மூழ்கியுள்ளனர். இந்த செல்பி மோகம் அதிகரிக்க அதிகரிக்க செல்பியை விதவிதமாக எடுக்க புதுப்புது உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ஒன்று செல்பி ஸ்டிக். இந்த ஸ்டிக்கில் ஸ்மார்ட் போனை பொருத்தி செல்பி எடுக்கும் முறை கடந்த சில நாட்களாக புகழ்பெற்று வருகிறது.
இந்நிலையில் சாப்பிடும்போது செல்பி எடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் பலருக்கு இருந்து வருகிறது. இந்த வருத்தத்தை போக்கும் வகையில் தற்போது செல்பி ஸ்பூன் என்ற புதிய சாதனம் சந்தைக்கு வந்துள்ளது.
ஜெனரல் மில்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான இந்த செல்பி ஸ்பூனில் ஒருபக்கம் உணவை எடுத்துக்கொள்ளும்படியும், மறுபக்கம் ஸ்மார்ட் போனை பொருத்தி சாப்பிடும்போது புகைப்படம் எடுக்கவும் உதவும்.
இந்த செல்பி ஸ்பூன் 30 இஞ்ச் வரை விரியக்கூடியது என்பதுதான் இதன் சிறப்பு அம்சம். இந்த ஸ்பூனை, செல்பி ஸ்பூன். காம் என்ற இணையதளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.