ஆலமரத்தில் ஐந்து தலை நாகவடிவம்: பொது மக்கள் வழிபாடு!

LRG_20150921104603868166

அவலூர்பேட்டை  அருகே ஆலமரத்தில் ஐந்து தலை நாகம் போன்ற வடிவத்திற்கு கிராம மக்கள் வழிபாடு செய்கின்றனர். மேல்மலையனூர் ஒன்றியம், அவலூர்பேட் டையை அடுத்த கடப்பனந்தல் கிராம குளக்கரை அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே  பழமை வாய்ந்த பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. இதில் சில ஆண்டுகளுக்கு முன், மரத்தின் ஒரு பகுதியில் ஐந்து தலை நாகம் போன்ற வடிவம்  ஏற்பட்டுள்ளது. இதன் அருகே மரத்தில் விழுதுகள் நாகத்தின் வால்பகுதி போல் தோற்றமளிக்கிறது. இது ஐந்து தலைநாகம் போன்ற வடிவத்தில்  காட்சியளிப்பதால் பொது மக்கள் மஞ்சள், குங்குமமிட்டு  வழிபடுகின்றனர். இதை காண்பதற்காக பலரும் சென்று வருகின்றனர்.

Leave a Reply