‘விஸ்வரூபம் 2’ பிரச்சனை முடிந்தது. விரைவில் ரிலீஸ்

‘விஸ்வரூபம் 2’ பிரச்சனை முடிந்தது. விரைவில் ரிலீஸ்
vishwaroopam
கோலிவுட் திரையுலகம் இதுவரை சந்தித்திராத அளவுக்கு பெரும் பிரச்சனைகளை சந்தித்து அதன் பின்னர் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்த சாதனை திரைப்படம் கமல்ஹாசனின் “விஸ்வரூபம்’. இந்த படத்தின் முதல் பாகம் தயாரிக்கப்பட்டபோதே இரண்டாவது பாகத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆனாலும் முதல்பாகம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிய பின்னரும் இரண்டாவது பாகம் இன்னும் வெளிவரவில்லை. இதற்கு காரணம், ‘விஸ்வரூபம்’ இரண்டாவது படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு ஏற்பட்ட பணச்சிக்கல்தான்.

‘ஐ’ படத்தின் சுமாரான வசூல் ஆஸ்கார் ரவிச்சந்திரனை கடனில் தள்ளிவிட்டது.ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்த ‘பூகோளம்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருந்தபோதிலும், பணச்சிக்கல் காரணமாக அந்த படம் வெளியாகவில்லை. இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ படத்தை கமல்ஹாசனே வெளியிட முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கமல் தரப்பினர் ஆஸ்கார் ரவிச்சந்திரனை சந்தித்து விஸ்வரூபம் 2′ படத்திற்காக ஆஸ்கார் நிறுவனம் செலவு செய்த தொகையை கமல் செட்டில் செய்ய விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

எனவே முதல் பாகத்தை போலவே ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் இரண்டாம் பாகமும், விரைவில் வெளிவரும் என்றும், இந்த படத்திற்கான மீதி படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கமல் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply