21 பெண்ணுருப்புகளை ஃபிரிட்ஜில் சேமித்து வைத்த மர்ம நபர். அதிர்ச்சி தகவல்

21 பெண்ணுருப்புகளை ஃபிரிட்ஜில் சேமித்து வைத்த மர்ம நபர். அதிர்ச்சி தகவல்
southafrica
தென்னாப்பிரிக்காவில் மனநிலை சரியில்லாத ஒருவன் 21 பெண்ணுறுப்புக்களை ஃபிரிட்ஜில் சேமித்து வைத்துள்ளதாக வெளிவந்துள்ள திடுக்கிடும் செய்தி, அந்த நாட்டையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள மத்திய ப்ரீ ஸ்டேட் என்ற மாநிலத்தில் உள்ள ஒருவர் ஃப்ரிட்ஜில்  21 பெண்ணுறுப்புகளை சேமித்து வைத்த்துள்ளதாக அந்த நபரிடம் இருந்து தப்பி வந்த 58 வயது பெண் ஒருவர் கொடுத்த புகாரினால் தென்னாப்பிரிக்க போலீஸ் அதிர்ச்சி அடைந்தது.

உடனடியாக காவல்துறையினர் அந்த பெண் அடையாளம் காட்டிய புளோயெம்ஃபோண்டெய்ன் நகரில் உள்ள ஒருவீட்டை அதிரடியாக காவல்துறை சோதனை செய்தது. சோதனையில் அந்த வீட்டில் உள்ள ஒரு ஃபிரிட்ஜில் 21 பெண்ணுறுப்புகளின் துண்டுகள் ஒரு பிளாஸ்டிக் கவர்களில் போட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த வீட்டில் அறுவை சிகிச்சையின்போது செலுத்தக்கூடிய மயக்க மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பயன்படும் கத்தி ஆகிய உபகரணங்களும் ஆங்காங்கே சிதறியிருந்தது.

பின்னர் அந்த வீட்டில் இருந்த நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் ஒரு மனநோயாளி என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இந்த நபரால் இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த பெண்ணுறுப்புகளுக்குரிய பெண்கள் உயிரோடு இருக்கின்றார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது.

Leave a Reply