நேதாஜி குறித்த வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு. பெரும் பரபரப்பு

நேதாஜி குறித்த வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு. பெரும் பரபரப்பு
nethaji
நேதாஜியின் உறவினர்களின் பலவருட கோரிக்கைகளை ஏற்று மேற்குவங்க அரசு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நேதாஜியின் ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டது. மேற்குவங்க அரசை அடுத்து மத்திய அரசும் தனது வசம் உள்ள ஆவணங்களை வெளியிட வேண்டும் என நேதாஜியின் உறவினர்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேதாஜியின் ரகசிய ஆவணங்களை மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க மறுத்து விட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்நேகாசிஸ் முகர்ஜி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். நேதாஜி பற்றிய 64 ரகசிய ஆவணங்களை மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள நிலையில், மத்திய அரசும் அதைப் பின்பற்றி இத்தகைய ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, ஏ.கே.கோயல் ஆகியோரை கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவல முதன்மை செயலாளரை மனுதாரர் அணுகலாம். அவர்கள் பதில் அளிக்கும் வரை மனுதாரர் காத்திருக்க வேண்டும். அல்லது டெல்லி ஐகோர்ட்டை அணுகலாம்” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

“மத்தியில் இதற்கு முன் ஆட்சியில் இருந்த அரசுகள் உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. இந்த ஆவணங்கள் வெளியிடாதது, மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும்” என்று மனுதாரர் முகர்ஜி குற்றம் சாட்டினார். இதற்கு நீதிபதிகள், “எல்லா இடத்துக்கும் அடிப்படை உரிமைகளை கொண்டு வராதீர்கள்” என்று தெரிவித்தனர்.

Leave a Reply