அனுஷ்காவை அடுத்து அண்ணன் – தம்பியுடன் இணைந்த நித்யாமேனன்?
கடந்த 2013ஆம் ஆண்டு நடிகை அனுஷ்கா ஷெட்டி சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருக்கும் ஒரே நேரத்தில் ஜோடியாக நடித்து வந்தார். சூர்யாவின் ‘சிங்கம் 2’ மற்றும் கார்த்தியின் ‘அலெக்ஸ்பாண்டியன்’ ஆகிய படங்களில் அவர் நடித்தார். இந்நிலையில் இதே போல் தற்போது இன்னொரு நடிகை சூர்யாவுக்கும், கார்த்திக்கும் ஒரே நேரத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர்தான் கண்மணி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட நித்யாமேனன்
இந்த வருடத்தில் ‘ஓகே கண்மணி’, காஞ்சனா 2′ என இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நித்யாமேனன் தற்போது சூர்யா நடித்து வரும் ’24’ படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் மணிரத்னம் இயக்கும் புதிய படம் ஒன்றில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எனவே அனுஷ்காவை அடுத்து அண்ணன் சூர்யாவுக்கும், தம்பி கார்த்திக்கும் ஒரே நேரத்தில் ஜோடி சேரும் நடிகையாக நித்யாமேனன் மாறியுள்ளார்.
மேலும் கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் தமிழ், மற்றும் கன்னடத்தில் உருவாகிவரும் சுதீப் நடிக்கும் படத்திலும் நித்யாமேனன் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.