“தல 56” படத்திற்கு திடீர் தடையா? அதிர்ச்சியில் அஜீத் ரசிகர்கள்
தல அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ திரைபடத்தின் சேலம் விநியோக உரிமையை பெற்ற பிரபல விநியோகஸ்தர் ஒருவர் சேலம் திரையரங்குகளில் ஒப்பந்தம் செய்து 2.4 கோடி அட்வான்ஸ் தொகையாக பெற்றார். ஆனால் பட வெளியீட்டின் முன் தினம் சில திரையரங்க உரிமையாளர்கள் விநியோகஸ்தருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக படத்தை திரையிட திடீரென மறுத்தனர்
அஜீத் படம் திட்டமிட்டபடி வெளியாகாமல் இருந்தால் அஜீத் ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள் என முடிவு செய்த தயாரிப்பளர் ஏ.எம்.ரத்னம் பட வெளியீட்டின் முந்தைய தினம் சம்மந்தபட்ட விநியோகஸ்தரிடம் போட்ட ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்துவிட்டு சேலம் விநியோக உரிமையை தன் நெருங்கிய நண்பரான ஐங்கரன் முவீஸ் கருணமூர்த்தியிடம் கொடுத்தார். ஐங்கரன் மூவிஸ் பெயரில் திரையரங்குகளுக்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.
திரையரங்க உரிமையாளர்கள் ஒப்பந்த நகலை கேட்டபோது அப்போது கருணாமூர்த்தி வெளியூரில் இருப்பதாகவும், அவர் வந்தவுடன் ஒப்பந்தம் கையொழுத்து போட்டு தரப்படும் என தியேட்டர் உரிமையாளர்களிடம் கூறப்பட்டது. கடைசி நாள் என்பதால் படம் திரையானால் போதும் என திரையரங்க உரிமையாளர்களும் அதை பெரிது படுத்தவில்லை. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ‘என்னை அறிந்தால்’ நல்ல வசூலை கொடுத்தபோதிலும் சேலத்தில் படம் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை. சேலத்தில் ரூ.1.6 கோடி மட்டுமே வசூல் செய்தது. தற்போது ரூ.80 லட்சம் திரையரங்க உரிமையாளர்களுக்கு விநியோகிஸ்தர் பாக்கி தர வேண்டியுள்ளது. ஆனால் தற்போது திரையரங்க உரிமையாளர்களுக்கு வரவேண்டிய ரூ.80 லட்சத்திற்கு ஏ.எம்.ரத்னம் உள்பட யாரும் பொறுப்பேற்க மறுக்கின்றனர்.
எனவே தங்களுக்கு வரவேண்டிய ரூ.80 லட்சம் பாக்கி தொகைக்கு விடை தெரியாமல் இருக்கும் திரையரங்க உரிமையாளர்கள் பணத்தை தரவில்லை என்றால் தீபாவளி அன்று வெளியாகும் ‘தல 56’ படத்தை சேலத்தில் ரிலீஸ் செய்வதில்லை என்ற முடிவில் சேலம் திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளனர். இதனால் ‘தல’ படத்திற்கு முதல் தடை வந்துள்ளதாக கோலிவுட்டில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.