சிலி நாட்டில் வரலாறு காணாத நிலநடுக்கத்தால் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.

சிலி நாட்டில் வரலாறு காணாத நிலநடுக்கத்தால் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.
[carousel ids=”72248,72249,72250″] தென்அமெரிக்க நாடான சிலி நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு காரணமாக சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிப்பதாகவும், நில நடுக்கத்தின் பாதிப்பால் அந்நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த வாரம் சிலி நாட்டின் இலாபெல் என்ற பகுதியில் வரலாறு காணாத அளவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 8.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் சுமார் 9 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். சுமார் 10 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

சிலி நாட்டில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டு இருந்தாலும் இம்முறை தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பாதிப்பு பலமடங்காக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுகாதாரமான குடிநீர், உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த நாட்டு மக்களுக்கு தாராளமாக உதவுமாறு ஐ.நா. சபையும் இதர பன்னாட்டு தொண்டு நிறுவனங்களும் அழைப்பு விடுத்துள்ளன

Leave a Reply