என்னென்ன தேவை?
இறால் – கால் கிலோ
முட்டை – 3
வெங்காயம் – 3
தனி மிளகாய்த் தூள், மிளகுத் தூள் – தலா அரை ஸ்பூன்
கரம் மசாலா – சிறிதளவு
கடுகு – கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
இறாலைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி வையுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு, பொரிந்ததும் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்குங்கள். பிறகு பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, இறாலைச் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நேரம் வேகவையுங்கள்.
கொதித்தவுடன் மிளகாய்த் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பைச் சேர்த்து சுண்டும் வரை கிளறிவிடுங்கள். வெந்த இறாலுடன் முட்டையை உடைத்து ஊற்றி கரண்டியால் நன்கு கிளறுங்கள். மிளகுத் தூளைத் தூவி இறக்கிவையுங்கள்.